By the immense grace of Sri Gurunatha, this yeartoo, the ‘Purattasi’ Month Utsav was celebrated in a grand manner. Thousands of devotees from all over Tamil Nadu undertook the ritualistic fast and vows unto Sri Maharanyam Kalyana Srinivasa Perumal and arrived at the temple for Darshan on the last Saturday of the ‘kanya’ month – October 15th, 2016.

Right from the morning, many of them offered their hair and a few lit lamps as ‘Akhanda Deepam’ to culminate their vows.
At about 7:00 am, ‘Anna Koota Utsavam’ was celebrated for the Utsava Murthy with prayers for the wellbeing of every living being in the world. A special prayer was performed for peace and love to prevail in the universe by Sri Gurunatha’s and the Lord’s grace. Following this, the gathered devotees celebrated the Lord by singing and dancing with MahamantraKirtan. Then, a mass prayer was performed with the lighting of the ‘akhanda deepam’. Ladoo and Annakoota Utsav prasad was distributed to everyone who came to participate in the festival.The divine Name that destroys all sins, echoed in every nook and corner.

In the evening, Kalyana Utsav was celebrated and colored powder was also smeared in celebration. The devotees took leave with tears in their eyes.

——-

ஸ்ரீ ஸத்குருநாதரின் கருணையால் இந்த ஆண்டும் புரட்டாசி மாத உத்ஸவம் ( கன்யாமாத விரதம்) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நமது மஹாரண்யம் ஸ்ரீ கல்யாணஸ்ரீநிவாஸ பெருமாளைக்குறித்து மாலையணிந்து விரதமிருந்து மஹாரண்யத்திற்கு பெருமாளை ஸேவிக்க கடைசி சனிக்கிழமையன்று(15/10/2016) வந்திருந்தனர்.

அன்று அதிகாலை முதலே அநேகம்பேர் முடிகாணிக்கை செலுத்தியும், அகண்டதீபமேற்றியும் தத்தமது விரதத்தை பூர்த்தி செய்தனர்.

காலை சுமார் 7.00 மணிக்கு ஸ்ரீ உத்ஸவர் புறப்பாடகி அன்னகூட உத்ஸவம் வைபவமாக நடந்தேறியது. உலகில் உள்ள அனைத்து உயிர்களின் நன்மைக்காகவும் ப்ரார்த்த னை செய்துகொண்டோம்.

கூட்டுப்ரார்த்தனையில் நாட்டுக்காக போராடும் ராணுவவீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர் நலத்திற்கும் மனமுருகி வேண்டிக்கொண்டோம்.

உலகம்முழுதும் பகவானின் கருணையாலும் ஸ்ரீ ஸத்குருநாதரின் அருளாலும் அன்பும் அமைதியும் நிலைபெற ப்ரார்த்தனை செய்தோம்.

பின்பு வந்திரந்த பக்தர்கள் புடைசூழ மஹாமந்திர நகர ஸங்கீர்த்தனமும் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் ஆடிப்பாடி நம் பெருமாளை கொண்டாடினர்.
பிறகு அகண்டதீபமேற்றி கூட்டுப்ரார்த்தனை நடைபெற்றது. திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னகூட உத்ஸவ ப்ரஸாதமும் லட்டுஸேவை ப்ரஸாதமும் வழங்கப்பட்டன.

மொய்த்தவல்வினைகளை தீர்க்கும் கோவிந்த நாமம் எல்லா திசைகளிலும் எதிரொலித்தவண்ணமே இருந்தது.

மாலையில் திருக்கல்யாண உத்ஸவமும், கந்தப்பொடி உத்ஸவமும் நடந்து பக்தர்கள் கண்ணீருடன் பெருமாளிடம் விடைபெற்றுச்சென்றனர்.



One Response to “Puratasi Last Saturday Celebrations in Maharanyam”

  1. r.venkataraman Says:

    i have been in an ecstasi after seeing these fotos.namaskarams.

Leave a Reply


 
Click here to download the "Hare Rama.." Mahamantra Kirtan in the voice of Sri Muralidhara Swamiji

© 2009 GOD India Satsang. All rights reserved
Privacy Policy | Copyright Notice
Powered by Wordpress